Sunday, March 28, 2010

Vinnai Thaandi Varuvaaya......thevaiya?

VTV....என் பார்வையில்...

அதாகப் பட்டது....

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற படத்துக்கு என்னவர் என்னை அழைத்துப் போனார்....சும்மா சொல்லக் கூடாது எனக்கு அப்படியே எருமைமாட்டின் மேல் மழை பொழிந்தது போலவே இருந்தது....இதுக்குப பேரு தான் வயசுக் கோளாறோ? தெரியவில்லை....வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்து விட்டாதாலோ என்னவோ...."காதல் கசக்குதையா...." என்று பாட தான் தோன்றுகிறதே தவிர ரசித்துக் கொண்டாட முடியவில்லை...

கெளதம் மேனன்-கு சில வரிகள்...

ஏனுங்க கெளதம் மேனன் அண்ணாத்தே/தம்பி......மணமேடை வரை வந்து பிறகு கல்யாணத்தை நிறுத்தறது-ங்கறது உங்களுக்கு அவ்வளவு ஈசியாக போச்சா? அதுனால ஏற்படற அசிங்கம் அவமானம் பத்தி எல்லாம் உங்களுக்கு கவலையே இல்லை? மொட்டை மாடி romance -கற பேருல இங்கே எவ்வளா அசிங்கம் நடக்குது தெரியுமா? ஆபீஸ் கட்டடிச்சுட்டு பைக்-ல மகாபலிபுரம் போறதெல்லாம் இப்படியா legalize பண்ணறது? "ஊர்-ல உலகத்துல எல்லாம் நடக்காததையா நான் சொல்லிட்டேன்" அப்படின்னு நீங்க கேக்கலாம். பட் உங்க படத்துல பார்த்தே சிலருக்கு ஐடியா கிடைக்கலாம் இல்லையா?

இதெல்லாம் கூட பரவா இல்லை அது என்னமோ நீங்களும் சரி, உங்கள மாதிரி இயக்குனர்களும் சரி...என்னமோ பொண்ணுங்க தான் காதல்-ல குட்டைய கொழப்பற மாதிரியும் காதலுக்கு எதிரி-எ பொண்ணுங்களோட அப்பா தான்-கற மாதிரி சொல்லறீங்க?

மூளை இருக்கற எந்த பொண்ணும பீசிபிளிட்டி-ங்கறதை யோசிக்காம இருக்க மாட்டா...அது மட்டும் இல்லாம காதலிக்கற வரைக்கும் தான் அந்த பையன் அவ பின்னாடி சுத்துவான்....கல்யாணத்துக்கு அப்பறம் அந்த பொண்ணோடது தான் எல்லா தலைவலியும்...என்ன பண்ணறது....ஆசை அறுபது நாள்...மோகம் முப்பது நாள்...மொத்ததுல தொண்ணூறு நாள்....அதுக்கப்பறம் நடக்கறதை எல்லாம் இந்த காலத்துல சினிமா-ல சொல்லறது இல்லையே.....விசு, பாலச்சந்தர் மாதிரி நல்ல இயக்குனர்கள் இருந்தப்போ அவங்க அதை எல்லாம் பத்தி படம் எடுத்தாங்க...இப்போ...திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7- 9 சீரியல் பார்த்து தான் அதை எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு....குத்தலா பேசற மாமியார், குதர்க்கமா பேசற நாதனார், காலை வாரற கொழுந்தன்...இதை எல்லாம் கண்டுக்காம போற நம்ம ஹீரோ காதலன் = கணவன்...இதுக்கெல்லாம் மத்தியில பிரச்சனைகளை எதிர்கொண்டு கஷ்டப் படற ஹீரோயின்...தேவையா இதெல்லாம்? நம்ம பொண்ணுக்கு ஏன் அவ்வளா கஷ்டம்-நு தான் பெண்ணை பெத்த ஒவ்வொரு அப்பாவும் நினைப்பார் ...அதுனால போயி அவரை வில்லனா காட்டறீங்களே....

நீங்க சொன்ன ஒரே ஒரு கருத்து தான் எனக்கு பிடிச்சிருந்தது. அதாவது ஹீரோயின் நினைக்கற மாதிரி அமைதியான வாழ்க்கை தான் எல்லாத்தையும் விட முக்கியம்.சொல்ல போனா சந்தோஷமான வாழ்க்கை-ங்கறது ஒரு பிரமை.அதுனால சந்தோஷமான வாழ்க்கையை விட அமைதியான வாழ்க்கையை நாடறது தான் புத்திசாலித்தனம்.....ஆனா இதைக் கூட ஹீரோ கண்ணோட்டத்துல நீங்க தப்பான விதமா காட்டீட்டீங்க...

என்னமோ போங்க...இது முதல்ல தேவையா? வேணுமா? வேண்டாமா? பிடிச்சிருக்கா? இல்லையா? இந்த மாதிரி வாழ்க்கையில கொஞ்சம் கூட தெளிவு இல்லாத இளைஞர்களையும் இளம் பெண்களையும் தான் இந்த மாதிரி படங்கள் உருவாக்குதோ-நு தோணுது....

வெரி சாரி....totally depressing movie!

Friday, March 26, 2010

வெட்டியின் உலகம் - நல்வரவு

"நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க"

இந்த பாடல் எனக்கு மிகவும் பொருந்தும்.

சுமார் 10 வருடங்களுக்கு முன், வேதியியல் இளகலை பட்டம் மட்டுமே வைத்து கொண்டு பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்த என்னை ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் என் தாய்-கு அடுத்த படியாக அள்ளி அரவணைத்தது. அன்றிலிருந்து தான் 'வெட்டி' அத்தியாயம் என் வாழ்க்கையில் தொடங்கியது. என்னை போன்ற மேலும் 24 அப்பாவிகளும் அள்ளிக் கொண்டு வரப்பட்டு ஏதோ ட்ரைனிங் என்ற பெயரில் ஒரு வெட்டி அரட்டை நடத்தப் பட்டது. அதற்கு பின்னர் 'ப்ராஜெக்ட்' என்ற இன்னொரு வெட்டிவேலையில் எங்களை ஈடு படுத்தினர். அப்போ எனக்கு சின்ன வயசு....என் நண்பர்களுக்கும் தான்...காலையில் அலுவலகம் வந்த உடன் சில முக்கிய வெட்டி பிரமுகர்களை மட்டும் கண்டறிந்து (சிலதெல்லாம் வேணும்னே பிஸி-ன்னு பிட் ஓட்டும்) அவர்களுக்கு மட்டும் ஒரு மின் அஞ்சல் பறக்கும்.

Choose the best answer:

"நீ இப்போ செய்து கொண்டிருப்பது?"
a) வேலை
b) வெட்டி
c) வெட்டி வேலை

அனேக நாட்களில் எனக்கு வரும் பதில் Option c -யாக தான் இருக்கும்...அதாவது நான் தேர்வு செய்த பிரமுகர்களிடம் இருந்து...அதன் பின் அன்று நாள் முழுவதும் மின்-அஞ்சலில் வெட்டி கச்சேரி நடத்தப் படும். ஏதாவது ஒரு அறிவு ஜீவி-யை தேர்வு செய்து, அவர்களை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசை படுத்தி டரியல் செய்து ஒரு மின் அஞ்சல் தாயிருக்கப் படும்

"இன்னா 40" மாதிரி "இன்னார் 40"

1) இன்னாருக்கு பிடித்த biscuit - Krackjack
2) இன்னாருக்கு பிடித்த சாக்லேட் - Crackle
3 )இன்னாருக்குத் தலைவலி வந்தால் உபயோகப் படுத்துவது - Krack கிரீம்

என்று சராமாரியாக ஓட்டல் கச்சேரி நடத்த படும்.
அந்த இன்னாரும் 'சரி இன்னைக்கு நாம மாட்டியாச்சு....வாய தேர்ந்த கதை கந்தல் ஆகிடும்' என்று அறிந்து கொண்டு மெளனமாக இருப்பான்/இருப்பாள்

இப்படியாக நான் உணர்ந்த வெட்டித் தனம் போக போக என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகி விட்டது...

நான் செய்யும் பல வெட்டி வேலைகளை இன்னும் சிறப்பிக்க தான் இந்த வலைப் பதிவு.

welcome to my vetti world.....