Friday, March 26, 2010

வெட்டியின் உலகம் - நல்வரவு

"நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க"

இந்த பாடல் எனக்கு மிகவும் பொருந்தும்.

சுமார் 10 வருடங்களுக்கு முன், வேதியியல் இளகலை பட்டம் மட்டுமே வைத்து கொண்டு பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்த என்னை ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் என் தாய்-கு அடுத்த படியாக அள்ளி அரவணைத்தது. அன்றிலிருந்து தான் 'வெட்டி' அத்தியாயம் என் வாழ்க்கையில் தொடங்கியது. என்னை போன்ற மேலும் 24 அப்பாவிகளும் அள்ளிக் கொண்டு வரப்பட்டு ஏதோ ட்ரைனிங் என்ற பெயரில் ஒரு வெட்டி அரட்டை நடத்தப் பட்டது. அதற்கு பின்னர் 'ப்ராஜெக்ட்' என்ற இன்னொரு வெட்டிவேலையில் எங்களை ஈடு படுத்தினர். அப்போ எனக்கு சின்ன வயசு....என் நண்பர்களுக்கும் தான்...காலையில் அலுவலகம் வந்த உடன் சில முக்கிய வெட்டி பிரமுகர்களை மட்டும் கண்டறிந்து (சிலதெல்லாம் வேணும்னே பிஸி-ன்னு பிட் ஓட்டும்) அவர்களுக்கு மட்டும் ஒரு மின் அஞ்சல் பறக்கும்.

Choose the best answer:

"நீ இப்போ செய்து கொண்டிருப்பது?"
a) வேலை
b) வெட்டி
c) வெட்டி வேலை

அனேக நாட்களில் எனக்கு வரும் பதில் Option c -யாக தான் இருக்கும்...அதாவது நான் தேர்வு செய்த பிரமுகர்களிடம் இருந்து...அதன் பின் அன்று நாள் முழுவதும் மின்-அஞ்சலில் வெட்டி கச்சேரி நடத்தப் படும். ஏதாவது ஒரு அறிவு ஜீவி-யை தேர்வு செய்து, அவர்களை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசை படுத்தி டரியல் செய்து ஒரு மின் அஞ்சல் தாயிருக்கப் படும்

"இன்னா 40" மாதிரி "இன்னார் 40"

1) இன்னாருக்கு பிடித்த biscuit - Krackjack
2) இன்னாருக்கு பிடித்த சாக்லேட் - Crackle
3 )இன்னாருக்குத் தலைவலி வந்தால் உபயோகப் படுத்துவது - Krack கிரீம்

என்று சராமாரியாக ஓட்டல் கச்சேரி நடத்த படும்.
அந்த இன்னாரும் 'சரி இன்னைக்கு நாம மாட்டியாச்சு....வாய தேர்ந்த கதை கந்தல் ஆகிடும்' என்று அறிந்து கொண்டு மெளனமாக இருப்பான்/இருப்பாள்

இப்படியாக நான் உணர்ந்த வெட்டித் தனம் போக போக என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகி விட்டது...

நான் செய்யும் பல வெட்டி வேலைகளை இன்னும் சிறப்பிக்க தான் இந்த வலைப் பதிவு.

welcome to my vetti world.....

3 comments:

Ananya Mahadevan said...

டியர் வெட்டி,
வெல்கம் டூ த வேர்ல்ட் ஆஃப் வெட்டி & மொக்கை ப்ளாக்கிங். :)

அன்புடன்
அநன்யா மஹாதேவன்

துபாய் ராஜா said...

வாங்க..வாங்க... வேலை எதுவும் இல்லைன்னா எல்லாருமே வெட்டிதான். எப்படியோ பதிவுலக ஜோதில வந்து ஐக்கியமாயிட்டிங்க.இனி கொழுந்துவிட்டு எரியவேண்டியதுதான். அப்படியே நல்லா பின்னூட்ட கும்மி அடிக்கவும் கத்துக்கணும்... :))

R.Gopi said...

வெட்டியாய் இருக்கும் இன்னொரு வெட்டி, இந்த ஜோதியில் ஐக்கியமாக கொடுக்கும் வெட்டி விண்ணப்பம்...

யப்பா... சும்மா சொல்லக்கூடாது.. இந்த வெட்டீஸ் & க்ராக்ஸ் பதிவு பலே ரகம்....

சும்மா பின்னீட்டேள் போங்கோ... வெட்டி...