Sunday, March 28, 2010

Vinnai Thaandi Varuvaaya......thevaiya?

VTV....என் பார்வையில்...

அதாகப் பட்டது....

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற படத்துக்கு என்னவர் என்னை அழைத்துப் போனார்....சும்மா சொல்லக் கூடாது எனக்கு அப்படியே எருமைமாட்டின் மேல் மழை பொழிந்தது போலவே இருந்தது....இதுக்குப பேரு தான் வயசுக் கோளாறோ? தெரியவில்லை....வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்து விட்டாதாலோ என்னவோ...."காதல் கசக்குதையா...." என்று பாட தான் தோன்றுகிறதே தவிர ரசித்துக் கொண்டாட முடியவில்லை...

கெளதம் மேனன்-கு சில வரிகள்...

ஏனுங்க கெளதம் மேனன் அண்ணாத்தே/தம்பி......மணமேடை வரை வந்து பிறகு கல்யாணத்தை நிறுத்தறது-ங்கறது உங்களுக்கு அவ்வளவு ஈசியாக போச்சா? அதுனால ஏற்படற அசிங்கம் அவமானம் பத்தி எல்லாம் உங்களுக்கு கவலையே இல்லை? மொட்டை மாடி romance -கற பேருல இங்கே எவ்வளா அசிங்கம் நடக்குது தெரியுமா? ஆபீஸ் கட்டடிச்சுட்டு பைக்-ல மகாபலிபுரம் போறதெல்லாம் இப்படியா legalize பண்ணறது? "ஊர்-ல உலகத்துல எல்லாம் நடக்காததையா நான் சொல்லிட்டேன்" அப்படின்னு நீங்க கேக்கலாம். பட் உங்க படத்துல பார்த்தே சிலருக்கு ஐடியா கிடைக்கலாம் இல்லையா?

இதெல்லாம் கூட பரவா இல்லை அது என்னமோ நீங்களும் சரி, உங்கள மாதிரி இயக்குனர்களும் சரி...என்னமோ பொண்ணுங்க தான் காதல்-ல குட்டைய கொழப்பற மாதிரியும் காதலுக்கு எதிரி-எ பொண்ணுங்களோட அப்பா தான்-கற மாதிரி சொல்லறீங்க?

மூளை இருக்கற எந்த பொண்ணும பீசிபிளிட்டி-ங்கறதை யோசிக்காம இருக்க மாட்டா...அது மட்டும் இல்லாம காதலிக்கற வரைக்கும் தான் அந்த பையன் அவ பின்னாடி சுத்துவான்....கல்யாணத்துக்கு அப்பறம் அந்த பொண்ணோடது தான் எல்லா தலைவலியும்...என்ன பண்ணறது....ஆசை அறுபது நாள்...மோகம் முப்பது நாள்...மொத்ததுல தொண்ணூறு நாள்....அதுக்கப்பறம் நடக்கறதை எல்லாம் இந்த காலத்துல சினிமா-ல சொல்லறது இல்லையே.....விசு, பாலச்சந்தர் மாதிரி நல்ல இயக்குனர்கள் இருந்தப்போ அவங்க அதை எல்லாம் பத்தி படம் எடுத்தாங்க...இப்போ...திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7- 9 சீரியல் பார்த்து தான் அதை எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு....குத்தலா பேசற மாமியார், குதர்க்கமா பேசற நாதனார், காலை வாரற கொழுந்தன்...இதை எல்லாம் கண்டுக்காம போற நம்ம ஹீரோ காதலன் = கணவன்...இதுக்கெல்லாம் மத்தியில பிரச்சனைகளை எதிர்கொண்டு கஷ்டப் படற ஹீரோயின்...தேவையா இதெல்லாம்? நம்ம பொண்ணுக்கு ஏன் அவ்வளா கஷ்டம்-நு தான் பெண்ணை பெத்த ஒவ்வொரு அப்பாவும் நினைப்பார் ...அதுனால போயி அவரை வில்லனா காட்டறீங்களே....

நீங்க சொன்ன ஒரே ஒரு கருத்து தான் எனக்கு பிடிச்சிருந்தது. அதாவது ஹீரோயின் நினைக்கற மாதிரி அமைதியான வாழ்க்கை தான் எல்லாத்தையும் விட முக்கியம்.சொல்ல போனா சந்தோஷமான வாழ்க்கை-ங்கறது ஒரு பிரமை.அதுனால சந்தோஷமான வாழ்க்கையை விட அமைதியான வாழ்க்கையை நாடறது தான் புத்திசாலித்தனம்.....ஆனா இதைக் கூட ஹீரோ கண்ணோட்டத்துல நீங்க தப்பான விதமா காட்டீட்டீங்க...

என்னமோ போங்க...இது முதல்ல தேவையா? வேணுமா? வேண்டாமா? பிடிச்சிருக்கா? இல்லையா? இந்த மாதிரி வாழ்க்கையில கொஞ்சம் கூட தெளிவு இல்லாத இளைஞர்களையும் இளம் பெண்களையும் தான் இந்த மாதிரி படங்கள் உருவாக்குதோ-நு தோணுது....

வெரி சாரி....totally depressing movie!

8 comments:

தக்குடு said...

ஒரு நல்ல பாயிண்ட் கூட இல்லமலா மேனன் அண்ணாச்சி படம் எடுத்துருக்காரு?? veryyy bad .சும்மா 'சம்சாரம் அது மின்சாரத்துல' வர கண்ணம்மா மாதிரி கிழிச்சு தொங்கவிட்டுடேளே???....:)

Ananya Mahadevan said...

நானும் டவுன்லோடு பண்ணி முதல் அரை மணி நேரம் பார்த்தேன். பயங்கர சலிப்பா இருந்தது. ஆல்டு+எஃப்4 அமிக்கிட்டு ஜூட்.. நிம்மதியா இருக்கு. இன்னும் எத்தனை வாட்டி இதே மாதிரி காட்சிகள்? ஸ்ஸ்ஸ்ஸ அபா... போர்டு டு டெத்!

எல் கே said...

ithukuthan nan padam pakkve illa. eppa simbu herova irukano appa antha padam urupadathu

vetti said...

@thakkudu

vaanga vaanga....thangal varavu nalvaravu aaguga....sorry thakkudu....romba erichhal aagiduthu...night show vera...thookkathai tholaichuttu poyi ukkaarndhadhukkaagavaavadhu nalla irundhirukkalaam....kaasu waste aanadhu dhaan miccham..

@ananya

thank you anans....ennai pol innoru opinion irukkaradhai nenaichu romba sandhosha padaren..

@LK

nalla mudivu....inimey 120 roobaayai picchaikaaranukku pottaalum poduveney thavirthu simbu nadicha padathai paarakkaradhillai-nu oru mudivoda irukka poren....thank you for your comments

அண்ணாமலையான் said...

நீங்க சொன்னீங்களே.. ஆஃப்பாயில் கேசுங்க அதான் நாட்ல நெறய இருக்கு... அதனால எத எடுத்தாலும் ஓடும் ஓஹோனு போஸ்டிங்கும் வரும்...

துபாய் ராஜா said...

எல்லாம் பிரமை... :))

தக்குடு said...

அனன்யா அக்கா, ஸ்டேடஸ் மெசேஜ்ல போட்டும், buzz and lorry yellam விட்டும் அங்கச்சியோட ப்ளாக்கை பிரமோட் செய்யும் உங்க பாசத்தை பாத்தா புல்லரிக்குதுமா!!!...:)

R.Gopi said...

விண்ணை தாண்டி வருவாயா ரொம்ப ரொம்ப நல்ல படம்னு யாரோ சொன்னாங்களே... அவர் பேரு கூட..... ம்ம்ம்ம்ம்...

ஆஹ்.... கவுதம் மேனன்!!!!