Sunday, April 18, 2010

கோடை வள்ளல்




என் இனிய பதிவுலக நண்பர்களுக்கு.....

"என்னடா இது... ரெண்டு மூணு பதிவு போட்டுட்டு வெட்டி எங்கேயோ ஓடிடுச்சு" என்று எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அது தான் கிடையாது...

கோடைக்காலம் தொடங்கி விட்டது...இதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவை இல்லை தான்....அனால் கோடை என்ற உடன் உங்களுக்கு நினைவுக்கு வருவது என்ன? எனக்கெல்லாம் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களுக்காக மட்டுமே கோடையை கொண்டாடத் தோன்றும். மார்க்கெட்-இல் புதிதாக வரும் பச்சை மாங்காயை பருப்பு சாம்பாருக்கு கடித்துக் கொண்டு சாப்பிடுவது, கம்பங்கூழ் செய்து பச்சை மிளகாய்களை வதக்கிக் கலந்து சாப்பிடுவது, தயிர் சாதம் மட்டுமே செய்து மோர் மிளகாய் , கருவேப்பிலை துவையல் , இஞ்சித் துவையல், எலுமிச்சை ஊறுகாய் என்று சகல விதமான side dish-களுடன் உள்ளே தள்ளுவது, rasna கலந்து ஆண்ட குண்டா அளவுகளில் குடிப்பது - இவ்விதமாக, பர வெட்டியாக இருந்த நான் படு பிசியாகி விட்டேன். இத்துடன் நான் செய்த ஒரு பெரிய்ய தவறால் தான் பதிவு பக்கம் வர முடியாமல் செய்து விட்டது. கமலா ஆரஞ்சு சீசன் தொடங்கி ஊரெல்லாம் எங்கு பார்த்தாலும் அழகாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். எனக்கும் கமலா ஆரஞ்சு-கும் ஏழாம் பொருத்தம். ஆனாலும் ஆசை யாரை விட்டது? ஒரேடியாக பத்து பழம் உள்ளே தள்ளியதும் தொண்டை கட்டிக் கொண்டு காய்ச்சல் வந்து டாக்டரிடம் ஊசி போட்டுக் கொண்டு - இதில் வேறு ஒரு மூன்று நாட்கள் காலவிரயம்.

சரி...போனது போகட்டும்...இந்த 17 நாட்களில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள்

என் இரண்டேகால் வயதான ரெட்டைவால்கள் அவர்களது பள்ளி ஆண்டு விழாவில் (playschool) முதன்முதலாய் அழகான் ஆடைகள் அணிந்து மேடையேறி ஒரு சிறிய நடனமாடினார்கள். உண்மையில் கற்றுக்கொடுக்கப்பட்ட எந்த அபிநயத்தையும் அவர்கள் செய்ததாகத் தெரியவில்லை . அனால் மேடையில் இருந்த மற்ற நான்கு குழந்தைகளும் ஆடாமால் அழுதபடியே நின்றதால் எல்லோர் கவனமும் இவர்கள் மீது தான் இருநதது. இவர்கள் ஆடிய சொந்த ஆட்டத்திற்கு தான் பலத்த கரகோஷங்கள்...என்னவென்று சொல்ல....எங்கள் எல்லோர் மனங்களும் பூரித்துப் போயின...

பதிவு பக்கம் வராமலிருந்த பொது மூன்று படங்கள் பார்த்தேன்...அதற்கு மேலே கூட பார்த்திருப்பேன்...ஆனால் மனதில் நின்றவை இவை மூன்று தான்...அதனால் இதோ என் கருத்துகள்...

அவதார் - சத்யம் திரையரங்கில் 3D யில் பார்த்த போது இந்த படம் என்னுள் ஒரு பெரிய்ய பாதிப்பை ஏற்படுத்தியது. நாம் இயற்கையை நேசிப்பதில்லை என்கிற குற்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. மனிதர்களும், விலங்குகளும், செடிகளும், கொடிகளும், மரங்களும் - இன்னும் சொல்லப் போனால் எல்லா உயிர்களும் ஒரே பிரபஞ்ச பரம்பொருளுடன்(Eywa) இணைந்து செயல் படுகின்றன என்கிற உயர்ந்த தத்துவம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. நானும் இயற்கைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆழமான எண்ணம் தோன்றியுள்ளது. இந்த வருடத்தில் இருந்து கொடுமையான கொடைக்காலத்திலாவது விலங்கினங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஒரு உதவ வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன்.

பையா - இந்த படத்தை பற்றி பெரிதாக சொல்லவதற்கு ஒன்றும் இல்லை. மூன்றே வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் - பாடல்கள், சண்டைக்காட்சிகள், மிட்சுபிஷி கார். அவ்வளவு தான். 'damsel in distress' எனப்படும் பழைய பார்முலாவில் அடங்கும் நாயகிக்கு உதவ பெங்களூரில் இருந்து மும்பை வரை காரில் அழைத்து போகிறார் ஹீரோ. என்னமோ நாமே மூன்று நாட்கள் காரில் சென்று வந்தது போல் அலுப்பாக இருக்கிறது. ஆனாலும் கார்த்தி ஏமாற்றவில்லை. என்ன ஒரு விஷயம் வருத்தமாக இருக்கிறது என்றால் - உதவாக்கரை ரோலில் அறிமுகமாகி, கூலியாளாக நடித்து, இப்போது தான் காரோட்டி(தேர் ஓட்டறவன் தேரோட்டி-ன்ன, கார் ஓட்டறவன் காரோட்டி தானே?) ரோலில் நடிக்கிறார். இதற்க்கப்பரம் என்ன ரோல் கார்த்தி? ஆபீஸ் பாய், கிளெர்க், ஆபிசர், சூபெர்வைசெர், மேனேஜர் போன்ற வேடங்களில் நடித்து விட்டு சஞ்சய் ராமசாமி போன்ற CEO வேடத்தில் நடிக்க எத்தனை வருடங்கள் பிடிக்குமோ....அதெல்லாம் வேண்டாம் கார்த்தி....இன்றைய நிலையில் இருக்கும் ஆபீஸ் போலிடிக்ஸ்கு இதெல்லாம் நடக்க இன்னும் 30 வருடங்கள் கூட பிடிக்கலாம். அதானால் இனிமேலாவது கொஞ்சம் சீக்கிரமாக முன்னேரும்படியான ரோலஸ்-இல் நடிக்கவும்.(ஓவராக ஜொள்ளு விடுகிறேன் என்று நினைப்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என்னருகில் உட்கார்ந்து தமன்னாவை பார்த்து ஜொள்ளு விட்டு தன் கைக்குட்டை போதாமல் என் துப்பட்டாவை கைப்பிடி துணியை விட மோசமாக நனைத்த என் கணவரை விட நான் தேவலை என்பது என் தாழ்மையான கருத்து).

Fracture - பையா படத்திற்கு நைட் ஷோ கிளம்புவதற்கு முன் டிவியில் இந்த படம் பார்க்க நேர்ந்தது. ஆரம்பம் மட்டுமே பார்க்க முடிந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது.ஒரு நல்ல படத்தை இழக்கிறோமோ என்கிற ஒரு சின்ன உறுத்தலோடு தான் டிவியை அணைத்து விட்டு கிளம்பினோம். ஆனால் இன்றைக்கு மறுபடியும் அந்த படத்தை HBO-vil ஒளிபரப்பினார்கள். ஒரு படத்தின் ஆரம்பத்தில் ஒரு சின்ன suspense -ai வைத்து இறுதி வரை ஒரு சுவாரஸ்யமான ஆடு-புலி ஆட்டத்தை நடத்திக் காட்டி இருக்கிறார்கள். அந்த suspense இறுதியில் உடைபடும் வரையில் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இத்தனை சாமர்த்தியமாக பின்னப்பட்ட ஒரு கதையை பார்த்து வெகு நாட்களாகின்றன. இந்தப் படத்தை பார்த்தவர்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் படத்தின் பெயர் காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்.

4 comments:

தக்குடு said...

//கமலா ஆரஞ்சு ஒரேடியாக பத்து பழம் உள்ளே தள்ளியதும் தொண்டை கட்டிக் கொண்டு காய்ச்சல் வந்து //

நல்லவேளை உங்களுக்கு பலாபழம் புடிக்காம இருந்ததே!!!!!...:)

//எங்கள் எல்லோர் மனங்களும் பூரித்துப் போயின// எங்களுடைய மனங்களும் தான்...:)

//விலங்கினங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஒரு உதவ வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். // பீலிங்குகுகுகு??????

//என் கணவரை விட நான் தேவலை என்பது என் தாழ்மையான கருத்து// லட்சியக் குடும்பம்...:)

Ananya Mahadevan said...

உன் ஈடிங் ஸ்ப்ரீ ரசிக்கும்படியா இருந்தது. ஃப்ராக்ச்சர் யாரும் பார்க்கலை. கார்த்தி எல்லாம் கடைசி வரை ஒன்லி க்ளார்க் தான்.. CEO ஆகுற ஒரு லக்ஷண்மும் தெரியலை.

எல் கே said...

//இவர்கள் ஆடிய சொந்த ஆட்டத்திற்கு தான் பலத்த கரகோஷங்கள்.//

cho sweet. சுத்தி போடுங்கோ ...
//என்ன ஒரு விஷயம் வருத்தமாக இருக்கிறது என்றால் - உதவாக்கரை ரோலில் அறிமுகமாகி,//
அதுவே அதிகம் அவருக்கு

//ஒரேடியாக பத்து பழம் ///
போதுமா???
is it enough

vetti said...

@தக்குடு
என்ன இப்படி சொல்லிட்டேள்? பலாபழம் முழுசா வாங்கி, அப்படியே சாப்ட்டு, தேன்-ல போட்டு சாப்ட்டு, சக்க வரட்டி பண்ணி சாப்ட்டு....அதெல்லாம் தனி track...பலாப் பழம், தர்பூசணி எல்லாம் பத்தி நான் பேசறதில்லை....எல்லாமே implied ஆக்கும்
ஆனாலும் இத்தனை வேகமான பின்னூட்டத்தில் என்னுள்ளம் மகிழ்ந்து போனது....மிக்க நன்றி....

@ஆனந்ஸ்
நீ இருந்திருந்த இன்னும் என்ஜாய் பண்ணி இருக்கலாம்....என்ன பண்ண....
ஏய்...என்னை பத்தி என்ன வேணும்னா சொல்லு....ஆனா கார்த்தி பத்தி ஏதாவது சொன்ன.....

@LK
உங்களுக்கு என்னை பத்தி ரொம்ப தெரியலை...அடுத்த பதிவுல இன்னும் தெரியும்....வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...