Thursday, April 1, 2010

நாம சந்கீர்தனமும் ரெட் பஸ்ஸூம்


ஸ்ரீமன் நாராயணனை அடைய பெரிய தபசுகள் எதுவும் தேவை இல்லை. நாமசங்கீர்த்தனம் மட்டுமே போதுமானது என்று உலகுக்கு உணர்த்திய பக்தர்கள், துருவனும் பிரகலாதனும். சாதரணமாக குழந்தைகளுக்கு தான் ஒரு அசாதாரணமான வைராக்கியம் இருக்குமாம். "நாராயணன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்" என்கிற சொற்றொடர் உண்மை என்றால், குழந்தைகளின் வைராக்கியம் எந்த உருவத்திலும் இறைவனை பிரத்யக்ஷ்மாக்கும்.

"The wheels of the bus go round and round
round and round, round and round
The wheels of the bus go round and round
All day long"

இப்படியாகத் தொடங்கும் அந்தப் பாடல். என் இரண்டேகால் வயது மகன்களுக்கு மிகப் பிடித்த அந்த பாடல் பேருந்தின் ஒவ்வொரு பாகத்தின் செயல் பாடு பற்றியும் சொல்லி அவர்களிருவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். என் இரண்டாவது மகனான வருணுக்கு நாங்கள் தொலைகாட்சி வாங்கியதே அந்த பஸ் பாடலை பார்க்க தான் என்கிற எண்ணம் எப்படி வந்ததோ தெரிய வில்லை. இவன் அந்த பாடலைப் பார்க்கும் விதத்தில் ஸ்ரீமன் நாராயணன் விரைவிலேயே பஸ் உருவில் எங்கள் வீட்டில் ப்ரத்யக்ஷமாகி 'குழந்தாய், நீ வேண்டுவதை கேள்' என்று கேட்கப்போகிறார். ஆனாலும் இந்த வருண் பயல் "பஸ் ரைம் போடு...நீ வேணா போ" என்று அழுது பெருமாளை கடுப்படிக்க போகிறான்.

குழந்தளுக்காக ரைம்ஸ் cd வாங்கப் போய் கடைசியில் அது எங்களுக்கு இப்படி வினையாகும் என்று துளியும் நினைக்கவில்லை. காலையில் கண் விழித்தது முதல் இரவு கண்ணயர்வது வரை அதே பாடலா? என் அப்பா காலையில் பூஜை செய்பவர். இவனது இந்தப் பாடல் வெறியால் அவர் சொல்லும் ஸ்லோகங்களை மறந்து "The bell on the bus goes ting-a-ling-ling" என்று ஏதோ பூஜையறையில் உட்க்கார்ந்து பிதற்றிக் கொண்டிருக்கிறார். அவர் தேவலை. என்னவர் கல்லூரியில் படிக்கும் தருதலை மாணவர் போலாகி விட்டார். எங்கு பஸ்ஸை பார்த்தாலும் கல்லாலடிக்க முற்படுகிறார். பாவம்...அவருக்கு இந்த பஸ் ரைமால் 'IPL பார்க்க முடியவில்லையே' என்கிற ஆதங்கம். ஆனால் இத்தனையிலும் கலங்காமல் தன் பாட்டுக்கு தன் வேலையில் மூழ்கி இருப்பது என் அம்மா மட்டுமே. வடாமிற்கு மாவு கிண்டுவதாகட்டும், அடைக்கும் அரைப்பதாகட்டும், ஒரு சின்ன குரலில் "humpty dumpty sat on a wall" என்று பாடிய படியே தன வேலைகள் அனைத்தயும் செவ்வனே செய்து விடுவார். அன்று அதிசயமாக என்னவர் ஏதோ ஒரு பாடலை வெகு நேரமாக முனகிகே கொண்டிருந்தார்.இவராவது பாடுவதாவது என்று உன்னிப்பாக கவனித்ததில் அவர் முனகிக் கொண்டிருந்தது - "Tick Tock Tick Tock merrily sings the clock". கஷ்டம் கஷ்டம் என்று தலையில் அடித்துக் கொண்டேன்.

சில நாட்களுக்கு முன்னால் ஒரு சாமியாரின் லீலைகளை தொலைக்காட்சியில் காட்டி ஊரே களேபரமாகிக் கொண்டிருந்த சமயம், பக்கத்துக்கு வீட்டு பெண்மணி வந்து "என்ன அநியாயம் பார்த்தீர்களா?" என்று கேட்டார்.நாங்களும் "ஆமாங்க நாளைக்கு பவர் ஷட்டவுனாமே ...பஸ் ரைம் போடாட்டா எங்க வீட்டுல பிரளயம் வந்துடுமே" என்று நாங்கள் எங்கள் பிரச்னையை சொல்ல போய், கடைசியில் அந்த பெண்மணி எங்கள் எல்லோரையும் மட்டமான ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றார். அதன் பின் ஏதோ வில்லங்கமான விஷயம் இருப்பதை உணர்ந்த என் கணவர் எனக்கு தமிழ் பத்திரிக்கைகள் வாங்கி தந்து எனது உலக அறிவை மிளிரச்செய்தார்.

என் மகன்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறார்கள். இதே வேகத்தில் அந்த CD தேய்ந்து விடாதா என்ற ஏக்கத்துடன் நான் காத்திருக்கிறேன்........

12 comments:

எல் கே said...

ithu unga veetla mattum illa , kids irukara ellar veetlaum undu. en ponnu innum oru padi mela(innum 2 years kooda agala), computer on panna avaluku elephant animations podanum .,illati mousea iluppa

ஜிகர்தண்டா Karthik said...

பசங்கனா என்ன மாதிரி இருக்கணும்...
ரைம் சொல்லு அப்படினு யாரு கேட்டாலும்...
டிவிங்கிள்... டிவிங்கிள்... சொல்லியே சமாளிச்சுடுவேன்...
இந்த காலத்து பசங்க...
என்னதான் எல்லாருக்கும் பிரச்சனை இருந்தாலும்... IPL பார்க்கம இருக்கற மாதிரி ஒரு கொடும வேறு ஏதும் இல்ல...

IPL இல்லாத போது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும் - டெக்னாலஜி வள்ளுவர்....

எல் கே said...

@veeti

IPL atthimbs can watch in YOu tube also

Ananya Mahadevan said...

நிலா நிலா ஓடி வா.. நில்லாமல் ஓடி வா..
என்னவா? நான் வேலை செஞ்சுண்டே பாடிண்டு இருக்கேன்! அதான். ஹீ ஹீ.. எனக்கும் இதே தொத்து வியாதி தான்.

அண்ணாமலையான் said...

பாவம்தான்

துபாய் ராஜா said...

உங்க பசங்க பரவாயில்லை.. என் பொண்ணு விஜய் பாட்டு பாடி கலங்க அடிக்கிறா.... :))

ஸ்வாமி ஓம்கார் said...

classic post..!

தக்குடு said...

ஆனால் இதுவும் ஒரு சுகமான இம்சைதான் தெரியுமா??? அனுபவிக்க யோகம் பண்ணினாதான் கிட்டும்.....:)

settaikkaran said...

ஹும்! கொடுத்து வச்ச குழந்தைங்க! ரைம்ஸ் சொல்லுறாங்க! நாங்களெல்லாம் "தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை..அரிசிமாவும் உளுந்துமாவும் அரச்சுச் சுட்ட தோசை," தான் பாடினோம். :-)))

R.Gopi said...

விஜய்யின் “வெட்டி” பாடல்கள் கேட்காமல், வேற எந்த பாட்டு கேட்டாலும் நமக்கு ஓக்கே....

vetti said...

@LK
வருகைக்கு நன்றி...எல்லாருக்கும் ஒரே மாதிரி பிரச்சனை தான் போல இருக்கு...வெளிய சொல்லி பேசிக்கறது மட்டும் தான் இல்லையோ...
42 inch flat screen TV வாங்கினதே மேட்ச் பார்க்க தான்...தம்மாதுண்டு லேப்டாப் ஸ்க்ரீன்-ல பார்க்க அவருக்கு எவ்வளவு மனசு வருத்தப்படும்?

@ஜிகர்தண்டா
நம்மளை மாதிரி எல்லாம் இப்போ பசங்களை வளர்க்க முடியலை...எல்லாத்துலயும் அவங்களுக்கு வரிஎட்டி தேவையா இருக்கு....IPL பார்க்க முடியாத சோகம் தான் ரொம்ப தாங்க முடியாம இருக்கு என் கணவருக்கு

@ஆனந்ஸ்
லேட்டஸ்ட்-எ இன்னொரு CD வாங்கி இருக்கோம். அதை upload பண்ணி லிங்க் தர்றேன். படிச்சுட்டு புதுசா ஏதாவது பாடு....ரொம்ப outdated-a இருக்க நீ...

@ துபாய் ராஜா
பரவயில்லையே...விஜய் கட்சி-க்கு வருங்கால மகளிர் அணி தலைவி ரெடி ஆகிட்டாங்க போல இருக்கு...


@அண்ணாமலையான்
:-) வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி

@சுவாமி ஓம்கார்
:-) நன்றி சுவாமிஜி

@தக்குடுபாண்டி
அதுவும் வாஸ்தவம் தான்...என்ன ஒண்ணு சில நேரங்கள்-ல இம்சை-க்கும் இன்பத்துக்கும் வித்யாசம் தெரியாம மரத்து போக வேண்டியதா இருக்கு....

@சேட்டைக்காரன்
அய்யா....உங்களை மாதிரி பெரிய மனுஷங்க ப்ளாக் எல்லாம் என்னை மாதிரி கத்துக்குட்டிங்க படிக்கறதோட சரி. பின்னூட்டம் விடற அளவுக்கெல்லாம் தையிரியம் இல்லை....ஆனா நீங்க....தேடி வந்து படிச்சு பின்னூட்டம் விடறீங்க....ரொம்ப நல்லவங்க நீங்க...
தமிழ் ரைமேஸ் cd தனியா இருக்கு அந்த பாட்டேல்லாமும் அத்துப்படி...background மீசிக்-ஓட பாடுவானுங்க ரெண்டு பெரும்....

தக்குடு said...

hello, aduththa post podungo! yevloo naal aachchu???...:)